துப்பாக்கி முனை  20-09-2018

 

இப்போது டீசர் பட முன்னோட்டம் ரிலீஸ் பண்ணப்பட்டு ஒரு மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி படு வேகமாக எல்லோரின் மனதையும் திருடிக்கொண்டிருக்கும் படம் ”துப்பாக்கி முனை”.

படத்தின் தயாரிப்பாளர் வி.கிரியேஷன்ஸ் திரு. கலைப்புலி எஸ் தாணு  அவர்கள். வழக்கம்போல பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாதிருக்கும் என்பதை முன்னோட்டம் காட்டுகிறது.

ஹீரோ விக்ரம் பிரபு ஹீரோயின் ஹன்சிகா இருவரும் அழகு.

நடிகர் விஜய் அவர்களுக்கு ஒரு ”துப்பாக்கி” படம் போலவும், நடிகர் சூர்யா அவர்களுக்கு ”காக்க காக்க” படம் போலவும் விக்ரம் பிரபு அவர்களுக்கு ”துப்பாக்கி முனை” படம் அமையும்.

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் அவர்கள், ஹீரோ பேசும் முதல் வசனத்திலேயே இயக்குனர் மணிரத்னம் அவர்களின் உதவியாளர் என்பதை நிருபித்துவிட்டார். தயாரிப்பாளர் பெயர் வரும் முன்பாக இரண்டு சாட்டுகள் வருகிறது. அந்த இடத்திலிருந்து ஆச்சர்யத்தை உண்டு பண்ணிய ஒளிப்பதிவாளர் ராசாமதி அவர்கள் கடைசிவரை பிரமிப்பூட்டுகிறார். அழகான ரம்மியமான ஒளிப்பதிவு. ஏற்கனவே பல படங்களில் தன் திறமையான ஒளிப்பதிவில் அசத்திய இவர், முன்னோட்ட காட்சியிலும் பார்ப்பவர்கள் யாவரையும் தன்வசப்படுத்துகிறார்.

பின்னணி இசை அற்புதம்.

அனைத்து அற்புதமான விஷயங்களின் கலவையாக இப்படம் வரும் என்று நம்புகிறோம்.

காதலோடு கூடிய ஆக்சன் கலந்த ”துப்பாக்கி முனை” படம் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. இந்த வெற்றிப்படம் விரைவில் வெளிவந்து அனைவரின் மனதையும் அள்ள இருக்கிறது.

தயாராகுங்கள் !

 

நன்றி !

ஆசிரியர்

ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்