தோழர் வெங்கடேசன்

Score Board
Magazine NameScore
Online Film News4

Cast and Crew

Director
Mahasivan

Cinematography
Vedha selvam

Music
Shakishna

Castings
Hari
Monika

Songs & Editing
Maha Sivan

Bala Films

Producers
Mathavi
Harishankar


வணக்கம். 

பெற்றவர்களை இழந்து தானாக உழைத்து வாழ்க்கை நடத்தும் ஹீரோ ஹரி. குடிசைக் தொழிலாக சோடா  கம்பெனி நடத்திப் பிழைக்கும்  ஹீரோவிற்கு பெண் பார்க்கும் படலம் ஒருபக்கம். எந்தப் பெண்ணும் அமையவில்லை.

 இரவில் ரோட்டு ஓரத்தில் டிபன் கடை நடத்தி வரும் ஒரு அம்மா, அவள் மகள் வீரோயின் மோனிகா. ஹீரோ பெண் தேடிக் கொண்டிருக்க. ஹீரோயின் அம்மா இறந்துவிட, அனாதையான ஹீரோயின் மோனிகாவை, சில காம மனிதர்களிடமிருந்து காப்பாற்றி ஹீரோ தன் வீட்டில் குடியமர்த்துகின்றார். இருவரும் சோர்ந்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு நாள் சோடா போடா போகும்போது அரசு பேருந்து ஹீரோ மீது மோத, இரண்டு கைகளையும் இழக்கிறார் ஹீரோ. 

முதல் பாதியில் அழகான காதலையும், இரண்டாம் பாதியில் நகைச்சுவை மற்றும் அவர்கள் வாழ, படும் பாடுகளை காட்டுவதாக திரைக்கதை உள்ளது.

ஆர்ப்பாட்டமில்லாத ஹீரோ ஹரியின் நடிப்பு. அமைதியான ஹீரோயின் மோனிகா நடிப்பு பாராட்டும்படி உள்ளது

அவ்வப்போது வந்து போகும் வில்லன், பஸ் டிரைவர், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரன், பஸ்ஸை கடத்தும் குடிகாரன் மனதில் பதிகின்றார்கள்.

”வேலியில போன ஒனாணை… என்ற பாடல் அருமை.

அரசாங்கத்தை நம்பி வாழும் விளிம்பு நிலை மக்கள் படும் அல்லல்கள் அவதிகளை துல்லியப் படுத்துகிறார் இயக்குனர் மகாசிவன்.

ஹீரோயைனை மிக அழகாக காட்டும் ஒளிப்பதிவு. தேவைக்கு தகுந்தாற்போன்ற பின்னணி இசை யாவும் பலம் சேர்க்கிறது. யதார்த்தத்தைப் படமாக்கும் இயக்குனர்கள் குறைவு. ஏனெனில் அது உண்மையான வாழ்வியலோடு தொடர்புடையது. அது படோடோபம் அற்றது. அதை அன்னியமில்லாமல் நம் அருகாமையில் காட்டுகிறார்.

இயக்குனர். நிறைய முகங்கள் புதிது. செம்மையாக அனைவரிடமும் நடிப்பை வாங்கியிருக்கிறார். இயக்குனர் மற்றும் இணையாக பயணித்த ஒளிப்பதிவாளர் இருவரின் சிரத்தைகள் புலனாகிறது. இது போன்ற படங்களை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர்களையும் ”ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்” வாழ்த்துகிறது.

சோகம் சற்று அதிகமாகவே இழையோடுகிறது.

நல்ல படம். வாழ்த்துகள் !

- வேதம் அ.கென்னடி.
 


Verdict: உண்மையை உரக்கச் சொல்லும் படம் !

Score: 4 / 5

Review by : OnlineFilmnews Review Board

Your rating: None Average: 4.3 (8 votes)
To prevent automated spam submissions leave this field empty.
CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.