Magazine Name | Score |
Online Film News | 3 |
எப்போதும் குடி மற்றும் பெண்களுடன் நண்பர்கள் சூழ சந்தோசமாக வாழ்ந்து வருபவன் நாயகன் விஜய் தேவரகொண்டா. அவர் அப்பாவும் தமிழக முதல்வருமாகிய நாசர் மீது ஊழல் வழக்கு வர, அவர் தன் பதவியை ராஜினமா செய்துவிட்டு விட்டேத்தியாக திரியும் ஹீரோவிடம் ஆட்சியைக் கொடுக்கிறார். அவர் எப்படி அரசியலை எதிர்கொண்டார். அப்பாவையும் மிஞ்சி வெற்றிக்கண்டார் என்பதே கதை.
ஹீரோவுக்கும் பலமாகவும் பாலமாகவும் சத்யராஜ் அவர்களும் எம்.எஸ். பாஸ்கர் அவர்களும் இருக்கிறார்கள். ஹீரோயின் மேரின் பிசாடா அவர்கள் சத்யராஜ் அவர்களின் மகள். அவரும் பத்திரிகையாளர்.
இதில் எதிர்கட்சியைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருப்பவர் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இடைவேளை முன்பாக முதல்வர், 'ஸ்ட்ரீட் லைட் ஒடையாமா பாத்துகுங்க' என்று சொல்வதும், படத்தின் இறுதியில், 'கூவத்தை சுத்தம் செய்யவேண்டும்' என்பதும் முதல்வருக்கான தகுதியாக படவில்லை. அவ்வப்போது கேம் வேறு ஆடுகிறார். அரசியலை வைத்து ஹீரோவும், நம்மை வைத்து இயக்குனரும் கேம் விளையாடுவதாகவே தோன்றுகிறது. சமீபத்தில் தமிழக அரசியலில் நடந்த மற்றும் நடந்துக்கொண்டிருக்கிற கூத்துகளை மையமாக வைத்து எடுத்த படமாக இது தோன்றுகிரது.
இன்னும் கொஞ்சம் அக்கறையோடு எடுத்திருக்கலாம்.
நன்றி
ஆசிரியர்,
ஆன்லைன் பிலிம் நியூஸ்.