Magazine Name | Score |
Online Film News | 31/2 |
சைக்கோ த்ரில்லர் கதையை வைத்துக்கொண்டு எப்படியாவது படம் இயக்கிவிட வேண்டும் என்று போராடுகிற உதவி இயக்குனர் ஹீரோ விஷ்ணு விஷால். ஒவ்வொரு தயாரிப்பாளரும் ஒருசில காரணங்களைச் சொல்லி தவிர்த்துவிடுகின்றனர்.
ஹீரோவின் மாமா போலிஸ் அதிகாரி, அவர் ஹீரோவை இயக்குனர் ஆசையை விட்டுவிட்டு எஸ் ஐ பரிட்சை எழுதச் சொல்கிறார். எழுதி தேர்வாகிறார். பயிற்சி அதிகாரியாக பணியில் சேர்கிறார். பணியில் சேர்ந்தும் அவரின் தணியாத விருப்பம் சக கைதியிடமே கதை சொல்ல வைக்கிறது.
நகரத்தில் பள்ளி இளம் சிறுமிகள் ஆங்காங்கே காணாமல் போகிறார்கள் இரண்டு நாட்கள் ஆனதும் காணாமல் போனவர்கள் சில குறிப்பிட்ட அடையாளங்களோடு பொது இடங்களில் பிணமாக கிடைக்கிறார்கள். இதன் தொடர்ச்சி காவல் துறைக்கு சவாலாகவும், தலைவலியாகவும் இருக்கிறது. இது தொடர்பான விசாரணையில் ஹீரோவுக்கும் இருக்கும் ஸ்கிரீன்பிளே புத்தியால் துல்லியமாக கணிக்கிறான்.
ஒரு கட்டத்தில் ஹீரோவின் மாமா மகளே கடத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடைக்கிறாள். ஹீரோ புலன் ஆய்வை தொடங்குகிறார்; நெருங்குகிறார்.
படத்தின் நாயகி அமலாபால் பள்ளி ஆசிரியை. பொய் கையெழுத்து விஷயமாக பள்ளிக்கு அழைக்கப்பட்டு, வருகிறார். அந்த தொடர்பு நீடித்து காதலாகிறது. வழக்கமான டூயட் பாடல்கள் இல்லை என்பது ஆறுதலாக இருந்தது.
ஹீரோவின் பதவி போகிறது. பல்வேறு தடைகள் எல்லாவற்றையும் மீறி தேடுதல் வேட்டையில் முன்னேற்றம் அடைகிறார். இதுபோன்ற ஒரு பழைய வழக்கு விசாரணையில் தொடர்புடைய அதிகாரி ராதாரவியை ஹீரோ சந்திக்கிறார் அவர் கதை சொல்கிறார் கதை பின்னோக்கி விரிகிறது.
வெளிநாட்டு தம்பதிகள் அவர்களுக்கு பிறந்த ஆண்குழந்தை ஹார்மோன் குறைபாடால் இளமையிலேயே வயது முதிர்ச்சியாக தோற்றமளிக்கிறது. அவனை பள்ளிக்கூடத்தில் சக மாணவ மாணவிகள் ஏளனமும் பரிகாசமும் செய்ய, அவன் செய்த காதலும் தோல்வியில் முடிய விரக்தியின் உச்சத்தில் சைக்கோ கொலைகாரனாகிறான். காதலித்த பெண்ணையே முதல் கொலை செய்கிறான். பின் அவன் கைது செய்யப்படுகிறான். இவ்வாறு சொல்லி முடிக்கிறார்.
பெண்தான் கொலையாளி என்று மக்களிடம் பரவியிருக்கும் சூழலில் ஆண் என்று ஒருகட்டத்தில் உறுதியாகிறது.
இறுதியில் நாயகி அமலாபாலின் அக்கா மகள் கடத்தப்படுகிறார். அவரை ஹீரோ மீட்டாரா? அந்த சைக்கோ கொலைகாரனை என்ன செய்தார்? என்பதாக கதை முடிகிறது.
படம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக போகிறது. அடுத்தடுத்து என்ன என்பது பார்வையாளகளின் எதிர்பார்ப்பை கூட்டுகிறது. ஒரு வழக்கமான கதி என்றாலும் அதை திரைக்கதையாக்கிய விதம்தான் இயக்குனரை பாராட்ட வைக்கிறது.
இயக்குனர் ராம்குமார் அவர்கள் ஏற்கெனவே ”முண்டாசுபட்டி” என்ற நகைச்சுவை படத்தை இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர். இந்த படத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பொருத்தமான இசையை வழங்கியிருக்கிறார். அதேபோல் ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் மற்றும் பட தொகுப்பாளர் சான் லோகேஷ் ஆகியேரின் பணி அழகானது.
நாயகன் விஷ்ணு விஷால், நாயகி அமலாபால் அபாரமாக நடித்திருக்கிறார்கள். நடிகர் முனிஷ்காந்த் அவர்கள் இதுவரை நடித்திராத ஆழமான கதாபத்திரத்தை செறிவோடு செய்திருக்கிறார். பெண் போலிஸ் அதிகாரி மனதில் நிற்கிறார்கள்.
படத்தில் இறுதி கட்சியில் ஒரு பட தயாரிப்பாளர் ஹீரோவுக்கு போன் போட்டு படம் இயக்க அழைப்பது முத்தாய்ப்பு.
சமீப வருடங்களாக பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மலிந்து வரும் சூழலில் வரவேற்க வேண்டிய மற்றும் வாழ்த்த வேண்டிய படம்.
தவறாமல் திரையரங்கம் சென்று குடும்பத்தோடு பாருங்கள்.
நன்றி !
ஆசிரியர்,
ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்