96

Score Board
Magazine NameScore
Online Film News4

Cast and Crew

directed by         C. Prem Kumar

Produced by      Nandagopal

Written by          C. Prem Kumar

Starring               

Vijay Sethupathi

Trisha Krishnan

Gouri G kishan

Music by              Govind Menon

Cinematography              N. Shanmuga Sundaram

Edited by             R. Govindaraj

Production

company

Madras Enterprises

Release date

4 October 2018

Language             Tamil


மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் 96.

காதலின் கையறுநிலையைச் சொல்லும் கதை.

இயல்பான இயற்கையான விஷயங்களை தேடிச்சென்று தன் கேமராவில் படம்பிடிக்கும் நாயகன் விஜய் சேதுபதி. அதன் ஒரு பயனாக, பயணமாக தான் பிறந்து, வளர்ந்து, படித்த தஞ்சாவூருக்குப் போகிறார். படித்த பள்ளிக்கூடத்தைப் பார்க்கிறார். நெகிழ்கிறார். பின் சமூக வலைதளமான ’வாட்ஸ்ஆப்’பில் பள்ளியில் படித்த அனைவரோடும் தொடர்பு கொள்கிறார். அதற்கு நண்பர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைக்கிறது. 96–ல் அந்தப்பள்ளியில் படித்த அனைவரும் சென்னையில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்றுகூடுவதாக தீர்மானிக்கிறார்கள். கூடுகிறார்கள்.

ஹீரோவுக்கு பதட்டம் ஆரம்பிக்கிறது.

கதை 96 ஆம் வருடம் பின்னோக்கி நகர்கிறது. அற்புதமாக பாடும் திறமையும் படிப்பில் அக்கறையும் கொண்ட நாயகி கெளரி. அவர்மீது நாயகன் ஆதித்யா பாஸ்கர் காதல் வசப்படுகிறான். இருவரும் ஒரே எண்ணவோட்டத்தில் பயணித்தாலும் காதலைச் சொல்லிக்கொள்ளாமல் உணர்ந்து கொள்வதோடு இருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததும் நாயகி நாயகன்மீது இங்க் அடிப்பதில் நாயகி தன்மீது வைத்திருக்கும் காதலை நாயகன் முழுமையாக உணர்ந்துகொள்கிறான்.

பிறகு, சில காரணங்களால் இருவரும் சந்தித்திக்கொள்ளவில்லை. இந்த சங்கமத்திற்கு நாயகி வருவதாக தகவல். அனைவரும் காத்திருக்கின்றனர். த்ரிஷா வருகிறார். அனைவரின் முகத்திலும் சந்தோஷம் பூக்கிறது.

இருவரும் சந்திக்கின்றனர்.

முன்பு நிகழ்ந்தவைகளைப் பற்றி விடிய விடிய பேசுகின்றனர். காதல் இழப்பு கண்ணீர் வலி ஏமாற்றம் இன்னும் ஏராளம்.

இறுதியில் த்ரிஷா சென்னையிலிருந்து திருச்சி வழியாக சிங்கப்பூர் போகும் கடைசி நேரம்வரை, கடைசி தூரம்வரை நாயகன் விஜய் சேதுபதி கூடவே இருந்து வழியனுப்புகிறார். நாயகியின் அழுகையோடு நம் கண்ணீரும் சங்கமிக்கிறது.

”யாராவது ஒரு ஆளு கட்டிப்பிடுச்சி முத்தம் கொடுங்களே” என்று பார்வையாளர்கள் மனம் ஏங்கும் அளவிற்கு இறுதி இருக்கிறது. இந்தியன் இங்க்லிஷ் படமான ”மிஸ்டர் மிசஸ் அய்யர்” என்ற திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளும் இதே உணர்வைதான் தந்தது.

ஹீரோ தன் காதல், வலி மற்றும் இழப்புகளை சொல்லும்போது அதற்கு த்ரிஷா காட்டும் முகபாவங்கள் அவர் நடிப்பின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. ஹீரோ அனைத்து உணர்ச்சிகளையும் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு வெகு இயல்பாக இருப்பது. நமக்குள் வரையறுக்க முடியாத கிளர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

பள்ளியில் படிக்கும் நாயகன் ராமாக வரும் ஆதித்யா பாஸ்கர், ஜானகியாக வரும் இருவரும் உண்டு பண்ணிய பாதிப்புகள்தான் விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரின் மீது நம்மை காதல்கொள்ள வைக்கிறது.

பள்ளிக்கூட வாழ்க்கையையும் அங்கு உண்டான காதலையும் கடந்து வந்தவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கும்போது பல ஞாபகங்கள் கிளர்ந்தெழும். அனைவரையும் ஏதோ ஒரு கட்டங்களுக்கு பின்னோக்கி இழுக்கும்.

”ரொம்பதூரம் போயிட்டியா?” என்று த்ரிஷா கேட்க, ”இல்லை உன்னை விட்ட இடத்திலேயேதான் நிக்கிறேன்” என்று விஜய் சேதுபதி சொல்லும்போது அந்த சிலேடை மனசை சல்லடையாக துளைக்கிறது. காதலுக்கு எப்போதுமே வீரியம் அதிகம்.

”முதல்ல நான் எப்டி நம்புனேன் உனக்கு என்னை பிடிக்காதுன்னு... என்ன இருந்தாலும் இருந்துட்டு உன்னை பாத்திட்டு வந்திருக்கணும்”, ”அன்னைக்கி மட்டும் அந்த பொண்ணு பேரு சொல்லிருந்தா எல்லாம் மாறியிருக்கும் எல்லாம் என் தலையெழுத்து”,  ”கேட்கணும்னு நெனைச்சேன் நான் அந்தக் காலேஜ்லதான் படிக்கிறேன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டதும், ”அத அதுக்கும் ஆளு வச்சிருந்தேன்…..”, “தாலி கட்றவரை என்னால இருக்கமுடியல… ”, “அந்த மண்டபத்லேர்ந்து….” ஹோட்டல் காலிங்பெல் சத்தம்… அற்புதம்!

”அதுப்புறம் உன் கல்யாணத்தில் உன்னை புடவையில பாத்தேன்….” என்று சொல்லும்போது மேள ஒலி, சோக கீதம் பாடும் நாதஸ்வரம் பொருத்தமான கோவிந்த் மேனனின் பின்னணி இசை. த்ரிஷாவின் ரியாக்‌ஷன், விஜய்சேதுபதியின் தலை கவிழ்வு அட்டா… இருவரும். மனதில் இருக்கை போட்டு உட்கார்ந்து பேசுவதுமாதிரி இருந்தது.

அழகான கதை, அம்சமான திரைக்கதை, ஆழமான வசனம் பாராட்டும்படியான இயக்கம்… இயக்குனர் சி.பிரேம்க்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

ஒளிப்பதிவில் சில சாகசங்களை சாதாரணமாக நிகழ்த்தியிருக்கிறார் என். சண்முகசுந்தரம். மொத்தத்தில் அனைவரையும் ஈர்க்கும் அருமையான படம்.

”கள்ள உறவு தப்பில்லை” என்று சட்டரீதியான தீர்ப்பு வந்திருக்கும் இந்த நேரத்தில், கள்ள உறவிற்கு மன்னிக்க நல்ல உறவிற்கு வாய்ப்புகள் இருந்தும் அதை தவறாக பயன்படுத்தாத இரண்டு அன்பு உள்ளங்களின் அற்புதமான கதை 96.

நன்றி !

ஆசிரியர்,

ஆன்லைன் ஃப்லிம் நியூஸ்.


Verdict: 96 படத்தின் கதை காதலுக்குப் புத்துயிர் ஊட்டும் விதை !

Score: 4 / 5

Review by : OnlineFilmnews Review Board

Your rating: None Average: 3.3 (29 votes)
To prevent automated spam submissions leave this field empty.
CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.