Magazine Name | Score |
Online Film News | 4 |
Directed by Mari Selvaraj
Produced by Pa. Ranjith
Written by Mari selvaraj
Story by Mari selvaraj
Starring Kathir / Anandhi
Music by Santhosh Narayanan
Cinematography Sridhar
Edited by Selva RK
Production
Company Neelam Productions
Release date 28 September 2018
Language Tamil
ஜாதியைச் சொல்லிக்கொள்ளாத ஒரு ஜாதி படம்
ஹீரோயின் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவள் ஆனந்தி. ஹீரோ கதிர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இருவரும் ஒரே சட்டக் கல்லூரியில் படிக்கிறார்கள். ஹீரோ சட்டம் படிப்பதற்கான காரணம் சமூக கேடுகளை எதிர்த்து கேட்பதற்கு சட்டம் படித்தாக வேண்டும் என்று ஊர் பெரியவரால் தூண்டப்படுகிறான். ஹீரோயினுக்கு அப்படியொன்றும் குறிக்கோள்கள் இல்லை.
ஹீரோவுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஒருகட்டத்தில் ஹீரோயின் அவனுக்கு ஆங்கிலம் போதிக்கிறாள். இப்படி தொடங்கிய நட்பு காதலாக கனிகிறது.
ஹீரோ அந்த சட்டக்கல்லூரியில் மொழி பிரச்னையாலும், ஜாதிய பிரச்னையாலும் படும் அவமானங்களே கதை. இறுதியில் வன்முறையால் காதலை கருவருக்க நினைத்த ஆதிக்க ஜாதியினர் ஹீரோவின் காதலை, அணுகுமுறையை மதிப்பதாக முடிகிறது.
இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நாம் ஏற்கெனவே பார்த்த்து போல இல்லாதிருப்பதே இந்தப் படத்திற்கு வலு சேர்க்கிறது கதை நகரும் விதம் நம்மை ரசிக்க வைக்கிறது. எதார்த்தமாக இருக்கிறது. நாயகத்தன்மை இல்லாத ஒரு இயல்பு வாழ்க்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஹீரோவுக்கு அவ்வளவு சகிப்பு தேவையில்லை. தன்னை பிறர் அடித்தாலோ, துன்புறுத்தினாலோ படம் நெடுக தாங்கிகொண்டு போகவேண்டும் என்ற அவசியம் இல்லை.
முதலில் நாய் வருகிறது. அது ரயில் தண்டாவளத்தில் கட்டிவைத்து கொல்லப்படுகிறது. பின்பு ஹீரோவை கொல்வதற்கு ஜாதிய திமிர்பிடித்த ஒருவன், ஹீரோவை அடித்து தண்டாவளத்தில் கிடத்தும்போது நாய் ஒரு சொரூபமாக வந்து காப்பாற்றுகிறது. மற்றபடி நாய் கதையில் ஒன்றும் சிறப்பாக வினையாற்றவில்லை. நல்ல மதிப்பெண்கள் எடுத்து படித்த ஒருவனுக்கு நூறு ’எ’யில் தொடங்கும் நூறு வார்த்தைகள் தெரியவில்லை என்பதும் ஜாதி வெறிபிடித்த சமூகத்தில் பிறந்து ஜாதியின் தீவிர தன்மை தெரியாமல் நாயகி இருக்கிறாள் என்பதெல்லாம்தான் படத்தில் நகைச்சுவை.
சட்டக்கல்லூரி வரும் நடன கலைஞரான ஹீரோவின் அப்பாவை, ஆதிக்க ஜாதியைச் சார்ந்த மாணவர்கள் வேட்டியை உருவி அசிங்கப்படுத்துகிறார்கள். கல்லூரி நிர்வாகம் அவர்களை என்ன செய்தது என்கிற கேள்விகள் எழுகிறது. இப்படி நெடுக தர்க்க ரீதியான கேள்விகள். விட்டுவிடுவோம்.
பார்த்த்தும் கடுப்பாகும் வயதான வில்லன், தன்னால் முடிந்த நகைசுவையை வழங்கியிருக்கும் யோகிபாபு ஹீரோயின் தந்தையாக வருபவர் இப்படி அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிரார்கள்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவை பாராட்டியாக வேண்டும் சந்தோஷ் நாரயணனின் இசை படத்திற்கு ஆழம் கூட்டுகிறது. பாடல்கள் புது வடிவங்களில் இருக்கிறது. இது வழக்கமான படமாக இல்லை என்பதே இதன் சிறப்பம்சம். இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், தயாரிப்பாளர் பா. ரஞ்சித் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
ஜாதிய பிரச்னைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளன என்பதை மறுக்கமுடியாது. இருந்தும் இந்தப் படம் மெல்ல மெல்ல ஜாதிகளை மறந்து வரும் இந்தக் காலகட்டத்தில், ஜாதிய எணணங்களை கிளர்ந்தெழ சிறு காரணியாக இருக்குமென்று கருத வைக்கிறது.
நன்றி
ஆசிரியர்,
ஆன்லைன் ஃபிலிம்நியூஸ்