Magazine Name | Score |
Online Film News | 3 |
Directed by Hari
Produced by Shibu Thameens
Written by Hari
Starring Vikram
Aishwarya Rajesh
Bobby Simha
Prabhu Ganesan
Keerthy Suresh
Music by Devi Sri Prasad
Cinematography Priyan
Venkatesh Anguraj
Edited by V. T. Vijayan
T. S. Jay
Production
Company Thameens Films
முழுக்க முழுக்க வியாபார நோக்கமே இலக்காக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.
இது ஒரு போலிஷ் கதை மற்றும் ஒரு பழிக்கு பழி வாங்கும் கதை
படங்ககளை வெறும் பொழுதுபோக்காக பார்க்கிற எண்ணம் கொண்டவர்கள் இதை முழுவதும் அனுபவிக்கலாம். அதற்கான சகல அம்சங்கள் குறைவில்லாமல் இருக்கிறது. ஒருவனை அடிப்பது பிறகு ஹை ஸ்பீடில் மறைவிலிருந்து வருவது இந்த மாதிரியான உத்திகள் ஏகப்பட்ட இடங்களில் இருக்கிறது.
சமீப வருடங்களாக காவல் மற்றும் அது சார்ந்த துறைகள்மீது தமிழக மக்களுக்கு பெரிய அபிப்ராயங்கள் ஏதும் இல்லை. அவர்கள் இந்த சமூகத்தில் நடந்து கொள்கிற விதமே இத்தன்மையான மரியாதையை சம்பாதித்து கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
அதிரி புதிரியாக ஒரு போலிஷ் ஆபிஷர், அவர் தனக்கான தனிநபர் பிரச்னையை தீர்த்துக்கொள்கிறார் என்பதே இதன் பிரதானம்.
இயக்குனர் ஹரி நடிகர் விக்ரம் ஆகியோரது கடுமையான உழைப்பு தெரிகிறது. ஹீரோயினிக்கு ஹீரோவைப் பிடித்துப்போனதற்காக சொல்லும் காரணங்கள் போதவில்லை.
பெரும்பாலும் நகைசுவைகள் நகைச்சுவையாக இல்லை. சில இடங்கள் நகைச்சுவையாக உள்ளது. இயக்குனர் ஹரி படம்தானே என்கிற சமாதானம் மட்டுமே நமக்கான சகிப்பு தன்மையைக் கொடுக்கிறது.
படம் முழுக்க ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்துகொள்கின்றனர். இது இயக்குனர் ஹரிக்கான உளவியல் பிரச்னை என்றே கருதுகின்றேன். கார்கள் சுத்துகிறது அல்லது கேமரா சுத்துகிறது. நமக்கு தலை சுற்றுகிறது. அதுவே நம்மை வேகமாக உணர வைக்கிறது.
பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
எதிர்பார்ப்புகள் ஒன்றும் அதிகமாக இல்லை என்பதால் நிறைவாக இருந்தது. மிகப்பெரிய வல்லமை நிறைந்த ஊடகம், இயக்குனர் ஹரி மாதியான ஆட்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்போடு கையாளவேண்டும்.
படம் பார்க்கலாம்.
நன்றி
ஆசிரியர்,
ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்