இமைக்கா நொடிகள்

Score Board
Magazine NameScore
Online Film News31/2

Cast and Crew

Directed by         R. Ajay Gnanamuthu

Produced by      C. J. Jayakumar

Written by          Pattukkottai Prabakar(Dialogues)

Screenplay by    R. Ajay Gnanamuthu

Story by               R. Ajay Gnanamuthu

Starring                Nayanthara

Atharvaa

Anurag Kashyap

Raashi Khanna

Music by             Hiphop Tamizha

Cinematography              R. D. Rajasekhar

Edited by             Bhuvan Srinivasan

Production

company             Cameo Films India

 

 


தொடர்ந்து ஒருவன் ஒரே மாதிரியான முறையில் கொலைகள் செய்துகொண்டு இருக்கிறான். அவனைக் கண்டுபிடித்து கொலை செய்கிறார்கள் பெண் சிபிஐ அதிகாரி நயன்தாரா. ஒரு பெண் சிபிஐ அதிகாரியின் கணவன் அவளுக்கு முன்பாக இறந்துபோக அவர்களைத் தேடிப்பிடித்து கொலை செய்கிராள். ருத்ரா கொலை செய்த பாணியில் செய்ப்படுகிறது இந்தக் கொலைகள்.. இப்போது ருத்ரா இருக்கிறானா? இல்லையா? என்ற குழப்பத்தில் போலிஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த சஸ்பென்ஸ் தேடலுடமாகப் போகிறது கதை. இறுதியில் யார் என்று தெரிய வருகிறது.

மருத்துவராக இருக்கும் நாயகன் அதர்வா, பீரை குடித்துவிட்டு மாடியிலிருந்து பாட்டிலை தூக்கி வாகனங்கள், ஆட்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் சாலையில் வீசுகிறார். சாலையில் பைக்கில் போன ஒருவர் அதைப் பார்த்து போட்டவர்களைத் திட்ட, அவன் நண்பன் இன்னொரு காலி பாட்டிலை கொடுத்து கேட்பவன் தலையில் போடச் சொல்கிறார் இதுதான் ஹீரோ அறிமுக காட்சி. இதில் ஹீரோ இதை தட்டிக்கேட்ட, சாலையில் பைக் ஓட்டிச் சென்றவன்தான்.. மக்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்று சொல்லாமல் கொஞ்சம் பொறுப்போடு நடந்திருக்கலாம்.

நேர்மையான முறையில் பணிபுரிந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஒரு கட்டத்தில் கீழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். அவர் வேலையை அவரே தூக்கு வீசிவிடுகிறார், அதற்கு காரணம் தற்போதய சிபிஐ ஆபிஸர் என்று தெரிய வர, அவரை பழி வாங்குவதே தனது குறிக்கொள் என்று அலைகிறார். அதற்கு பல உத்திகளை கையாளுகிறார். அந்தப் பாத்திரத்தில் மிகவும் யதார்த்தமான படங்களை எடுக்கக்கூடிய அனுராக் காஸ்யப் இதில் பிரண்டமான கமர்சியல் வில்லனாக நடித்திருக்கிறார். வழக்கமாக இயக்குனரகள் நடிகர்கள் நடிக்க வரும்போது நிறைய நடிப்பார்கள். தேவைக்கு அதிகமாக இருக்கும். அதில் இருந்து வேறுபட்டு நிற்கிறார். அலட்டிக் கொள்ளும் பாத்திரம். புதிதாக பார்ப்பதாலும், அவர் ஒரு இயக்குனர் என்பதாலும் தனிப்பட்ட விருப்பம் ஏற்படுகிறது.

ஹிப்பாப் தமிழாவின் பாடலும் பின்னணி இசையும் ரசிக்குபடி உள்ளது. நல்ல நேர்த்தியான ஒளிப்பதிவு. அநேக இடங்களில் மிகுந்த சிரத்தை எடுத்து படமாக்கி இருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர் அவர்கள்.

ஹீரோவைக் கண்டவுடன் காதல் வயப்படும் நாயகி. புரிதலோடு பழகிவிட்டு ஒரு சந்தர்ப்பத்தில் ஹீரோவை விட்டு விலகி இன்னொரு ஆணுடன் நெருக்கிப் பழகுகிறார். அவன் நாயகியின் இடுப்பில் கை வைக்கும்வரை நீள்கிறது அவர்களின் நட்பு ரீதியான பழக்கம். இதை ஹீரோ சந்தேகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்ல அதற்கு ஒரு புரிந்துணர்வை ஹீரோ தருகிறார். அவர் மருத்துவர் என்பதே ஒரு முறை வெள்ளை சட்டை, ஸ்டெதஸ்கோப் போட்டுவரும்போதுதான் தெரிகிறார். அவர் யாராக இருந்தாலும் பெரிய பாதிப்பு ஒன்றும் கதையில் வரப்போவதில்லை.

ஒரு பழிவாங்கும் கதை. காட்சிக்கு காட்சிக்கு இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாக கதைபோகிறது. பார்ப்பவர்களை ரசிக்கவைப்பது மட்டும்தான் இந்த இயக்குனரின் தீர்மானமாக இருந்திருக்கிறது. அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

நயன்தாரா அவர் பங்கை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். காதல் காட்சிகள் அதில் இடம்பெறும் வசனம் யாவும் விதியாசமான அணுகுமுறை

விஜய் சேதுபதி கொஞ்சநேரமே வந்தாலும் நிறைவாக தன் பங்கை ஆற்றிவிட்டுப் போகிறார். படம் முழுக்க முகர்த்தை இறுக்கமாக வைத்திருந்த ஹீரோயின், விஜய் சேதுபதியோடு இருக்கும்போது மட்டும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறார். நாமும் சந்தோசமாக இருக்கிறோம்.

படம் நீளமென்றாலும் போவது தெரியாது. இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள். தவறாமல் பார்க்கவும்.

நன்றி.

ஆசிரியர்,

ஆன்லைன் ஃபிலிம்நியூஸ்


Verdict: இமைக்க நொடிகள் படமெங்கும் கமர்சியல் நெடிகள்!

Score: 31/2 / 5

Review by : OnlineFilmnews Review Board

No votes yet
To prevent automated spam submissions leave this field empty.
CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.