Magazine Name | Score |
Online Film News | 31/2 |
Directed by Mani Ratnam
Produced by Mani Ratnam
A. Subaskaran
Written by Mani Ratnam
Siva Ananth
Starring Vijay Sethupathi/Silambarasan
Aravind Swami/Arun Vijay
Jyothika/Aditi Rao Hydari
Dayana Erappa/Aishwarya Rajesh
Prakash Raj/Jayasudha
Thiagarajan
Music by A. R. Rahman
Score: A. R. Rahman
Qutub-E-Kripa
Cinematography Santosh Sivan
Edited by A. Sreekar Prasad
Production company Madras Talkies
Language Tamil
கோயிலுக்கு சென்று விட்டு வரும் பிரகாஷ்ராஜ் அவரது மனைவி இருவரையும் துப்பாக்கியால் சுட்டு, குண்டுகளை எரிந்து கொலை செய்யும் முயற்சியோடு தொடர்கிறது கதை.
இந்த விபரம் அறிந்து பிரகாஷ்ராஜின் மூன்று மகன்கள் அப்பாவைப் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கான பின்னணி காட்டப்படுகிறது. அனைவரும் நல்ல நிலையில் செல்வ செழிப்பாக இருக்கிறார்கள். இதில் மூத்தவன் மட்டும் கேங்ஸ்டராக இருக்கிறான்.
கதை தொடங்கியதிலிருந்து அப்பாவும் அம்மாவும் காயங்களுடனும் கட்டுகளுடனும் இருக்கிறார்கள். மூவரும் அப்பாவை வந்து பார்த்ததிலிருந்து ’யார் கொலை செய்ய முயற்சித்தார்கள்?’ என்ற பதட்டத்திலிருந்து படம் விறுவிறுப்பாகிறது.
பிரகாஷ் ராஜ் எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னை முழுமையாக நிரப்பிக்கொள்வார். தன் அழகான ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரகாஷ்ராஜின் எதிராளி சின்னப்பதாசராக தியாகராஜன். அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. ஆக்ரோஷம் கண்களில் வெளிப்படுகிறது. செய்யாத குற்றத்திற்காக அவன் மருமகன் கொல்லப்படுகிறான். அவனுக்கு கோபம் வருகிறது.
இந்த புலன் விசாரணை ஒருபக்கம் நடந்தபடி இருக்க, ஒருநாள் படுக்கையறையில் பிரகாஷ்ராஜ் தன் மனைவியிடம், ”நம்மள கொலை செய்ய முயற்சி பண்ணது யாருன்னு தெரியும்.” என்றதும் அவளுக்கு மாதிரியே பார்வையாளர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு. ”உன் மகன்ல ஒருத்தன்” அவள் அதிர்ச்சியாக, ”யாருன்னு சொல்லவா?” என்று கேட்கிறார். அவள் ”வேண்டாம்” என்கிறாள். சில நாட்களில் பிரகாஷ்ராஜ் இறந்து போகிறார். இதற்கிடையில் மூத்தவனை தவிர ஊருக்கு சென்ற இருவர் வரவில்லை. காரியங்களை மூத்தவன் அரவிந்தசாமியே செய்துவிடுகிறார். அவனுக்கு கடைசிவரை சிறு சிறு பிரச்னைகளில் உதவி செய்பவராக விஜய் சேதுபதி. அவருக்கான தனித்துவம் படம் முழுக்க பிரதிபலிக்கிறது.
சில நாட்களில் எஸ்டிஆரின் மனைவி சாகடிக்கப்படுகிறாள், அருண் விஜயின் மனைவி போதைப்பொருள் பதுக்கல் வழக்கில் கைது செய்யப்படுகிறாள் ஒன்றன் பின் ஒன்றாக குடும்பம் சிதைகிறது.
நிறைய குழப்பங்களோடு கதை நகர்கிறது.
இடைவேளைக்கு பிறகு அரவிந்தசாமியை குறிவைத்து துரத்தும் அவன் இரண்டு தம்பிகள்,. அதனால் அரவிந்தசாமி படும் பயம் பார்வையாளர்களை கலவரப்படுத்துகிறது. படுவேகமாக கதை நகர்கிறது. இறுதியில் சகலத்திற்கும் காரணம் அரவிந்தசாமி என்று தெரியவர, ”சின்னவயசிலேர்ந்தே என் தம்பிங்க மாதிரி நான் சுதந்திரமா சந்தோஷமா இல்லை. எந்த முடிவையும் என்னை சுதந்திரமா எடுக்க விடல. அதான் அவருமேல எனக்கு கோபம்” என்று தன்பக்க நியாயத்தைச் சொல்கிறார். அவர் அருண் விஜயால் சாகடிக்கப்படுகிறார்.
தன் மனைவியைக் கொன்றது அருண் விஜய் என்று எஸ்டிஆருக்கு தெரியவர, அருண்வியை எஸ்டிஆர் கொல்கிறார். எஸ்டிஆரை போலிஸ் அதிகாரியான விஜய் சேதுபதி கொல்கிறார். இப்படி மூன்று பேரும் இறந்துபோவதோடு கதை முடிகிறது.
படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கிறது. சந்தோஷ் சிவனில் ஒளிப்பதிவு அற்புதமாக உள்ளது. ஏ.ஆர். ரகுமானின் இசை, பாடல் வழக்கம்போல் தனித்தன்மையுடன் இருக்கிறது.
ஜோதிகா, ஐஸ்வரயா ராஜேஷ், டயானா எராப்பா, அதிதிராவ் ஹயத்ரி ஆகியோரின் நடிப்பு அருமை.
இயக்குனர் மணிரத்னம் காலத்திற்கு ஏற்றாற்போல கதையை, திரைக்கதையை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். வாழ்த்துகள்.
உறவுச் சிக்கலை உன்னதமாக சொல்லியிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம்.
நன்றி !
ஆசிரியர்,
ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்.