சீமராஜா

Score Board
Magazine NameScore
Online Film News31/2

Cast and Crew

Directed by         Ponram

Produced by      R. D. Raja

Written by          Ponram

Starring                  Sivakarthikeyan

Samantha Akkineni

Music by              D. Imman

Cinematography   Balasubramaniem

Edited by             Vivek Harshan

Productioncompany 24AM Studios

Release date 13 September 2018

Country                   India

Language             Tamil

 


மிகவும், எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய பெரு முதலீட்டுப் படம் சீமராஜா. கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் நல்ல செல்வாக்கு. தன் நடிப்பாலும் தன் நகைச்சுவை திறமையாலும் இளம் தலைமுறையினரின் மனதை கொள்ளையடித்த நடிகர்களில் சிவ கார்த்திகேயன் நிகரில்லாதவர். தான் வளர்ந்து வரும் சூழலில் படங்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

முன்னால் ராஜ வம்சத்தை சேர்தவர் ஹீரோ. அதன் மிடுக்கோடு திரிபவர் அவருக்கும் புதிதாக உருவான பணக்காரன் மற்றும் வில்லனால், காதலால் ஏற்படும் பிரச்னைகள்தான் படம். படத்திற்குள் நீளமான கதை. ஃப்ளாஷ் பேக் ரொம்ப நேரம் நீள்கிறது. ”வளரி” என்கிற ஆயுத்தத்தையும் அதை கையாளுவதில் உள்ள கெட்டிக்காரத்தனத்தையும் தாத்தா விளக்குகிறார். படத்தின் இறுதி சண்டையில் விட்டேத்தியாக திரிந்த ஹீரோவே வளரியை பயன்படுத்தி காதலியை மீட்டெடுக்கிறார். இதில் வின்ட் மில்லை ஆங்கங்கே தொட்டுக் கொள்கிறார்கள்.. இவ்வளவு கணமான கதையை பார்வையாளனுக்கு சொல்வதில் குழப்பமும் தொய்வும் ஏற்பட்டுள்ளது.

பழம் பெருமை பேசிக்கோண்டு திரியும் ஹீரோ, அவர் வில்லனின் மகளைக் காதலிக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்னை இறுதியில் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே இதன் சுருக்கம்.

சிவகார்த்திகேயன் நடிப்பை நம்மால் ரசிக்க முடிகிறது. வழக்கமாக சத்தமாக பேசும் வில்லன். போதாத குறைக்கு சிம்ரன். கதைப்போக்கு அவ்வளவாக களைப்பு ஏற்படுத்தவில்லை.. பாட்டுகள் கேட்கும்படியாக உள்ளது. பாலசுப்ரமணியெம் சிறந்த ஒளிப்பதிவாளர் அவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இமான் எப்போதும் முத்திரை பதிப்பவர். சூரி முடிந்தமட்டும் நகைசுவையை வழங்கியிருக்கிறார்.

ஹீரோ முன்பாக இரண்டு சவால்கள். ஒன்று மார்க்கெட். மற்றொன்று வின்ட்மில். இரண்டையும் எளிமையாக செய்து முடிக்கிறார். நாயை சிறுத்தை என்று பரப்புரை செய்வதும் அதை ஊர் மக்கள் நம்புவதும் புது புரளியாக இருக்கிறது. இந்த மாதிரி படங்களில் அவ்வளவு தர்க்கங்களை எதிர்பார்க்க தேவையில்லை என்று சமாதானம் செய்துகொள்ளவேண்டியுள்ளது.

காதல் காட்சிகள் நன்றாக இருக்கிறது. நாயகி காட்சிக்கு காட்சி அழகாக தோற்றமளிக்கிறார்.

படத்தை தவறாமல் பார்க்கவும். ஒருமுறை பார்க்கலாம். விரும்பினால் பலமுறை பார்க்கலாம்.

நன்றி !

ஆசிரியர்,

ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்

 


Verdict: சீமராஜா குப்பத்துராஜா

Score: 31/2 / 5

Review by : OnlineFilmnews Review Board

No votes yet
To prevent automated spam submissions leave this field empty.
CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.