60 வயது மாநிறம்

Score Board
Magazine NameScore
Online Film News4

Cast and Crew

Directed by         Radha Mohan   

Produced by      Kalaipuli S. Thanu

Written by          Viji (dialogues)

Screenplay by    Radha Mohan

Story by               Hemanth Rao

Based on             Godhi Banna Sadharana Mykattu

Starring                Vikram Prabhu /Indhuja/Prakash Raj/Samuthirakani

Music by              Ilaiyaraaja

Cinematography M.S. Vivekanand

Edited by             T.S Jai

Production

company             V Creations


பெற்றோர்களின் அருமைகளை பில்ளைகள் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் அனபை சரியன முறையில் புரிந்துகொள்ளவேண்டும். இங்கே தந்தை தன்வரையில் மிகச் சரியாக இருக்கிறார். பிள்ளை அவ்வாறு இல்லை. அதைப் புரிந்துகொள்ளும் பாடமாகத்தான் இந்தப் படம்.

வேகவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் அவசரகதியிலான வாழ்க்கைச் சூழலில் இது மிகவும் அவசியமான படம்..

பார்ப்பவர்கள் மனதை நெகிழச் செய்யும் படம். பல இடங்கள் அழவைக்கிறது. மென்மையான நடிப்பு, கரடு முரடுகளற்ற வசனம், கண்களுக்கு உறுத்தாத ஒளிப்பதிவு, இசைஞானியின் மயக்கும் பின்னணி இசை அனைத்தும் அற்புதம். சில படங்களில் தொய்வுகள், தர்க்கங்கள் இருப்பினும் அதையெல்லம் விடுத்து நல்ல விஷயங்களை மட்டுமே பாராட்டிக்கொண்டே போகலாம் என்று எண்ண வைக்கிறது. அப்படித்தான் என்னை இந்தப் படத்தின் அருமை சார்ந்த விஷயங்களை எழுத வழி நடத்தியது.

இந்தப் படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் பிரகாஷ்ராஜ் அவர்கள்தான். அவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அவர் அவ்வப்போது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒருசில படங்களைத் தேர்வு செய்கிறார். அந்த மாதிரியான படங்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமாகவே இருக்கிறது.  இவர் நடிக்கும் படங்களில் வில்லனாக தோன்றி உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்கிறார். ஆனால் தான் நடிக்க தேர்ந்தெடுத்துக்கொண்ட மற்றும் தயாரிக்க தேர்ந்தெடுத்துக் கொண்ட படங்கள் உறவுகளின் புனிதத்தை  சொல்கிறது. இது அவர் இளைபாறும் இடம் என்று என்ண தோன்றுகிறது.. இயல்பான வாழ்க்கையின் சகல சந்து பொந்துகளில் உலவி உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கிறது. ”மொழி” படமாக இருக்கட்டும், ”60 வயது மாநிறம்” ஆக இருக்கட்டும். பரகாஷ்ராஜ் அவர்களின் நடிப்பு இதுபோன்ற படங்களில்தான் முழுமை பெறுவதாக நான் நினைக்கின்றேன்.

அற்புதமாக நடிப்பாற்றலை படம் நெடுக வாரி வழங்கியிருக்கிறார். குழந்தைத்தனத்தை தொடக்கத்திலிருந்து கடைசிவரை தொய்வின்றி தருகிறார். நடையாக இருக்கட்டும், பாவணையாக இருக்கட்டும், பேச்சாக இருக்கட்டும், சிரிப்பாக இருக்கட்டும். தான் தேர்ந்தெடுக்கொண்ட கதாபாத்திரத்தின் அடியாழம் வரை போகிறார்..

தான் நடிக்கும் படத்தில் எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை பத்திரமாக நிரப்பிக்கொள்கிறார்.

கடிகாரத்தை தொலைத்துவிட்டு மகனிடம் கேட்கிறார். பிறகு மாவு சட்டிக்குள் அதைக் காணுகிறார். அதைக் கரண்டியில் எடுத்து வைத்துக்கொண்டு ’மனைவி கிப்ட் கொடுத்த கடிகாரமல்லவா?’, எப்படி சட்டிக்குள் வந்தது? அப்போது சிவாவும் பார்த்துவிட இவனையல்லவா கேட்டோம்? என்று மூன்று விதமான சம்பவங்களுக்குமாக ரியாக்‌ஷனை தருவார். இவை அவரின் தேர்ந்த நடிப்பு. சிவா மும்பை போக வேண்டியிருப்பதால் அப்பாவை தங்கும் விடுதியில் விடுகிறேன் என்று சொல்லிய கணத்தில் அவர் மலர்ந்த முகம் மாறி, அந்த வீட்டை, மேல் நோக்கி இடம் வலமாக பார்ப்பார் அவரின் சிறந்த நடிப்பாற்றல் வெளிப்படும் இடமாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன். இன்னும் வழிநெடுக சொல்லிக்கொண்டே போகலாம்.

நாயகன் விக்ரம்பிரபு சாஃப்ட்வேர் படித்துவிட்டு வெளிநாடுபோக ஆசைப்படும் தன்மையான கதாபாத்திரம். ஆரம்பத்தில் சராசரி மகனாக இருந்தவர் மெல்லமெல்ல மனமாற்றம் அடைவது, காதலில் சாந்தமான நடிப்பை வெளிப்படுத்துவது யாவும் பாராட்டும்படியாக உள்ளது.

நாயகியிடம், ”நீங்க காணாம போன ஒருத்தர தேடுறீங்க. நான் ஒருத்தர தொலைச்சிட்டு தேடுறேன்” என்று சொல்லும்போது அப்பாவை பலவழிகளில் புரிந்துகொண்டும் தன்னை உலகமாக நினைக்கும் அப்பாவின் உலகத்திற்குள் வாழ ஆசைப்படுவது புரிகிறது.

”இந்த உலகத்தில அன்புதான் ரொம்ப முக்கியம். அது உள்ளே இருந்தா தெரியாது வெளியே காண்பிக்க தெரியணும்”  ”….மனுசங்கள படிக்கல” “அவதான் எல்லாத்தையும் மறந்திட்டா நான் எதையும் மறக்கல”, “ஆயிரம் அன்ப மனசில வச்சிக்கிட்டு விரோதியா தெரியிற ஒரே உறவு அப்பாதான்’ இன்னும் இதுமாதிரியான நிறைய இடங்களில் விஜி அவர்களின் முத்திரை தெரிகிறது. நாயகி இந்துஜாவின் பெரிய கண்கள், அந்த கண்கள் சொல்லும் காதல், சமுத்திரகனியின் மனமாற்றம் அழகு.

நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் காரணமாக உறவுகளின் தன்மை மங்கிவரும் காலக்கட்டத்தில் அப்பா மகன் இடையேயான பாசத்தை முன்னிலைப்படுத்தும் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் வி.கிரியேஷன்ஸ் திரு. கலைப்புலி எஸ்.தாணு சார் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

ஆசிரியர்,

ஆன்லைன் ஃபிலிம்நியூஸ்

 

.

 


Verdict: 60 வயது மாநிறம் உறவுகளை மேம்படுத்த வீசப்பட்ட உரம் !

Score: 4 / 5

Review by : OnlineFilmnews Review Board

No votes yet
To prevent automated spam submissions leave this field empty.
CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.