நன்றி கூறல்  20-02-2017

வணக்கம்.

அன்பு சார்ந்த நிரப்புதல்கள், சின்ன சின்ன அங்கிகாரங்கள் இப்படியான சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை சந்தோசப்படவைக்கிறது.

நான் எழுதி, ஹித்தேஷ் முருகவேல் அவர்கள் இசையமைத்து, தோழர் நவின் சீதாராமன், லெனின் சீதாராமன் ஆகியோர்கள் பாடி, அதிகாலை இன்ஃபோ மீடியா சார்பில் லெனின் சீதாராமன் அவர்களால் தயாரிக்கப்பட்டு youtube-ல் பதிவேற்றிய ”காவேரி உரிமைப் பாடல்”, புதுக்கோட்டை மாவட்டம், கல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவியர்களால் நடனம் அமைக்கப்பட்டு மேடையேற்றப்பட்ட நிகழ்ச்சி, ‘whatsapp’-ல் பரவி, அதை நானே பார்க்க நேர்ந்த தருணங்கள் நெகிழ்ந்த நிமிடங்கள்.

இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து, அரங்கேற்றம் செய்த அரசு மேல் நிலைப் பள்ளிக்கும், மாணவ மாணவியர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.

 

http://seithippalagai.blogspot.in/

 

அ.கென்னடி