ஆகச் சிறந்த தேசம்... பாடல்  16-09-2016

 

 

 

தொகையாறா:

தமிழ்நாட்டு ரத்தநாளம்

காவேரி ஆறு – அத

தவறவிட்டா விவசாயம்

என்னவாகும் கூறு

 

கோரஸ்:

ஆகச் சிறந்த தேசம் -  இதில்

வாழ்வது சந்தோஷம்

ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல

ஆகுது படுமோசம்

 

பல்லவி 1

இங்க நீவேற  நான்வேற இல்ல - வேண்டாம்

நமக்குள்ள பேதங்கள் கொள்ள

நாம பாரத அன்னைக்கி பொறந்தோம்

அத பாதிபேர் இன்னைக்கி மறந்தோம்

 

மேடு பள்ளங்கள்

மண்ணுல கிடக்கட்டும்

ஓடும் வெள்ளங்கள்

அணைகள கடக்கட்டும்

 

 கோரஸ்:

ஆகச் சிறந்த தேசம் -  இதில்

வாழ்வது சந்தோஷம்

ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல

ஆகுது படுமோசம்

 

சரணம் 1

வானத்த எதிர்பாத்து

பாதி வாழ்க்கை போச்சி

வயவரப்பு செழிச்சாதான்

எங்களுக்கு மீட்சி

 

இலவசமா கேட்கவில்லை

இத்தனைக்கும் நாங்க

எளக்காரமா பாக்குறீங்க

எப்பவுமே நீங்க

 

தரை வெடிச்சி கெடக்குதுபார் 

தாயோட பூமி

ஒருபோகம் அறுப்பருக்க

ஒத்தவழி காமி

 

கோரஸ்:

ஆகச் சிறந்த தேசம் -  இதில்

வாழ்வது சந்தோஷம்

ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல

ஆகுது படுமோசம்

 

சரணம் 2

உங்களுக்கு கோபம் என்ன

உடன்பொறந்த உறுப்பா

எங்களுக்கும் கோவம் வரும்

எழுந்து நிப்போம் நெருப்பா

 

வருஷத்துக்கு மூனு மாசம்

கெஞ்சிகிட்டே இருக்க

வார்த்தைகள மதிக்காம 

ஏளனமா மறுக்க

 

அடங்கிபோக காரணமே

தாய் பிள்ளை என்று

நம்ம குள்ள பாகுபாடு

தேவையில்லை இன்று

 

 

கோரஸ்:

ஆகச் சிறந்த தேசம் -  இதில்

வாழ்வது சந்தோஷம்

ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல

ஆகுது படுமோசம்

 

 

சரணம் 3

பழிக்குப் பழி தீர்வுன்னா

பகுத்தறிவு எதுக்கு

ஆத்திரம்தான் கண்ணை மூடும்

அறிவை நீ செதுக்கு

 

எக்கச் சக்க சேதாரம்

யாருக்கென்ன லாபம்

கரைவேட்டி வன்முறைக்கு

காட்டுகிற தூபம்

 

அணைக்கட்டி தேக்கி வையி

அது உன் தண்ணீரு

அண்டை நாட்டு மனுஷனாநீ

இந்தியனா கூறு

 

கோரஸ்:

ஆகச் சிறந்த தேசம் -  இதில்

வாழ்வது சந்தோஷம்

ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல

ஆகுது படுமோசம்

 

சரணம் 4

தமிழ்மறைய தெறந்து பாத்தா

வீர தீரம் தெரிக்கும் – உங்க

வன்முறைய திறந்து பாத்தா

மானம் ரோசம் சிரிக்கும்

 

ஒருத்தியோட கோபம் பொங்க

மதுரை நகரம் எரிஞ்சது

ஒட்டுமொத்த தமிழன் வெடிச்சா

ஒங்க கதை முடிஞ்சது

 

’அன்பு காட்டு சக உயிர்மேல்’

அதிகாரமும் படிச்சோம்

புலியகூட முறத்தைக் கொண்டு

தொரத்தி தொரத்தி அடிச்சோம்

 

கோரஸ்:

ஆகச் சிறந்த தேசம் -  இதில்

வாழ்வது சந்தோஷம்

ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல

ஆகுது படுமோசம்

 

அ.கென்னடி